வரலாற்றில் இன்று

•838 – ஆன்சென் என்ற இடத்தில் நடந்த சமரில் பைசாந்தியப் பேரரசர் தியோபிலசு அப்பாசியர்களிடம் பெரும் பின்னடைவைச் சந்தித்தார்.
•1099 – முதலாம் சிலுவைப் போர்: பௌலியனின் கோட்ஃபிறி எருசலேம் பேரரசின் திருக்கல்லறைத் தேவாலயத்தின் முதலாவது காப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
•1298 – இசுக்காட்லாந்து விடுதலைப் போர்கள்: பால்கிர்க் சமரில் இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னர் வில்லியம் வேலசையும் அவரது இசுக்காட்டியப் படைகளையும் தோற்கடித்தார்.
•1456 – அங்கேரியின் ஆட்சியாளர் பெல்கிரேட் முற்றுகையின் போது உதுமானியப் பேரரசர் இரண்டாம் முகமதுவைத் தோற்கடித்தார்.
•1499 – புனித உரோமைப் பேரரசர் முதலாம் மாக்சிமிலியனின் படைகளை சுவிசுப் படைகள் டொனார்க் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றன.
•1587 – அமெரிக்காவில் வட கரொலைனா, ரோனோக் தீவில் ஆங்கிலேயர்களின் இரண்டாவது தொகுதி குடியேற்றிகள் வந்திறங்கினர்.
•1706 – இங்கிலாந்துக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையில் ஒன்றிணைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது பின்னர் பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவாக வழிவகுத்தது.
•1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: எசுப்பானிய, பிரித்தானியக் கடற்படைகளுக்கிடையே சமர் மூண்டது. இதன்போது ஹோரஷியோ நெல்சன் கையில் படுகாயமடைந்து, கையின் ஒரு பகுதியை இழந்தார்.
•1802 – பேரரசர் கியா லொங் அனோய் நகரைக் கைப்பற்றி வியட்நாமை ஒன்றிணைத்தார்.
•1812 – நெப்போலியப் போர்கள்: வெல்லிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படைகள் எசுப்பானியாவில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர்.
•1823 – யாழ்ப்பாணத்தில் பட்டிக்கோட்டா குருமடம் டானியேல் வாரன் புவர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
•1916 – கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் ஊர்வலமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர்.
•1933 – தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதர் வைலி போஸ்ட் 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைக் கடந்து நியூயார்க்கை வந்தடைந்தார்.
•1942 – இரண்டாம் உலகப் போர்: போர்க்காலத் தேவைக்காக அமெரிக்காவில் பெட்ரோல் பங்கீட்டு அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
•1942 – பெரும் இன அழிப்பு: போலந்து, வார்சாவில் இருந்து யூதர்களின் நாடுகடத்தல் ஆரம்பமானது.