அடகு வைத்த நகையை சீக்கிரத்தில் மீட்கவும், நகை மீண்டும் அடகிற்கு செல்லாமல் இருக்கவும், வீட்டில் மென்மேலும் நகை பெருகவும் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். கை மேல் பலன் இருக்கும்.

ஏழை முதல் பணக்காரர்கள் வரை அவர்களுக்கு ஏற்றார் போல் பணப் பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கும். ஏதேனும் ஒரு பிரச்சினையை சரி செய்ய பணம் தேவைப்படுவதாக இருந்தால் முதலில் வீட்டிலுள்ள நகையை அடகு வைத்துதான் பணத்தை ஏற்பாடு செய்வார்கள். இவ்வாறு தற்காலிகமாக அடகு வைத்த நகையை எவ்வளவு முயற்சித்தாலும் சீக்கிரத்தில் திருப்பிக் கொண்டுவர முடியாத அளவிற்கு அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் மற்ற நகைகளும் அடகிற்கு செல்லும் சூழ்நிலை வந்து கொண்டே இருக்கும். இந்தச் சூழ்நிலை சரியாகி அடகு வைத்த நகை சீக்கிரம் வீட்டிற்கு வருவதற்கும், அவை மீண்டும் அடகிற்கு செல்லாமல் இருப்பதற்கும் செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

நகை அடகிற்கு செல்வதால் பெண்களின் மனம் எப்பொழுதும் வருத்தத்தில் இருக்கும். அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். இந்த சூழ்நிலையை சரி செய்ய பெண்கள் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். ஏனென்றால் பெண்கள் பின்பற்றும் சில காரியங்களினாலேயே மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைக்க முடியும். மகாலட்சுமி குடியிருக்கும் வீட்டில் அவர்களின் அம்சமான தங்கம், பணம் போன்றவை எப்பொழுதும் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை.

பரிகாரம் செய்யும் முறை:

முதலில் ஒரு வாசனை மிகுந்த திரவியத்தை வீட்டிலேயே தயார் செய்து கொள்ள வேண்டும். எப்பொழுதும் வீடு நறுமணமாக இருந்தால்தான் மகாலட்சுமி தாயார் வீட்டிற்குள் நுழைவார்கள். ஒரு பாத்திரத்தில் ஒரு சொம்பு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதனுடன் 20 பன்னீர் ரோஜாக்களை சேர்த்து அதனை அடுப்பின் மீது வைத்து நன்றாக கொதிக்க விடவேண்டும். ஒரு சொம்பு தண்ணீர் முக்கால் சொம்பு ஆகும் வரை கொதிக்க விட்டு பின்னர் அதனை நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

sembu-sombu

இப்போது தயார் செய்த பன்னீரை ஒரு சொம்பில் மாற்றி அதனுடன் மூன்று ஏலக்காயை நசுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு பச்சை கற்பூரத்தை நன்றாக நுனுக்கி சேர்த்துக்கொள்ளவேண்டும். பின்னர் சிறிதளவு துளசி இலைகளையும் சேர்த்து அதனுடன் சிறிது மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த திரவியத்தை தயார் செய்த பின்னர் அதனுள் நீங்கள் உபயோகிக்கும் ஏதேனும் ஒரு சிறிய தங்க நகையை போட வேண்டும். அதாவது கம்மல் அல்லது மூக்குத்தி போன்ற ஏதேனும் ஒன்றை போட்டு வைக்கலாம்.

pooja-room0

பிறகு இந்த கலசத்தினை பூஜை அறையில் வைத்து, விளக்கேற்றி மகாலட்சுமி தாயாரை நினைத்து வழிபட வேண்டும். இதனை விடியல் காலை அல்லது மாலை நேரத்தில் வளர்பிறை காலங்களில் செய்ய வேண்டும். பூஜை செய்த கலசத்தினை நீங்கள் நகை வைக்கும் இடத்தில் வைத்துவிட வேண்டும். இதன் மேல் மூடி போட்டு மூடாமல் அப்படியே திறந்து வைத்திருக்க வேண்டும். தொடர்ந்து 3 வாரங்கள் இந்த பூஜையை செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரம் பூஜை செய்யும்போதும் பன்னீரை புதியதாக தான் தயார் செய்ய வேண்டும். நீங்கள் உபயோகித்த பழைய பன்னீரை மரம் அல்லது செடிகளுக்கு ஊற்றிலாம் அப்படி இல்லை என்றால் மண்ணிலும் ஊற்றி விடலாம். இந்த பூஜையை நீங்கள் செய்துவர உங்கள் வீட்டில் உண்டாகும் மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

Author: admin