நிறைவேறாத ஆசைகளை 1 வரியில் இந்த இலையில் எழுதினால் போதும். எழுதியது அப்படியே நடக்கும். அப்படிப்பட்ட அந்த இலை எது? நீங்க தெரிஞ்சுக்க வேணாமா?

மனிதர்களுடைய ஆசைக்கு அவ்வளவு சுலபமாக அணை போட்டுத் தடுத்து விட முடியாது. ஒரு ஆசைகள் நிறைவேறினால் அடுத்த ஆசைகள் தலைதூக்க ஆரம்பித்து விடும். நம்முடைய அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றால் நிச்சயமாக அது நடக்காத காரியம். இருப்பினும் நியாயமான ஆசைகள், நியாயமான கோரிக்கைகள் என்று நமக்கும் சில உண்டு. அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற தாந்த்ரீக ரீதியாக சுலபமான ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

poovarasu1

ஆனால், உங்களுடைய தவறான ஆசைகளை இந்த இலையில் எழுதி, அது நடக்க வேண்டும் என்று நினைக்கவே கூடாது. அது நடக்கவும் நடக்காது. ஏனென்றால் குலதெய்வத்தை வேண்டி தான் நாம் இந்த இலையில் நம்முடைய ஆசைகளை எழுதப் போகிறோம். நல்லதுக்காக, நல்ல விஷயங்களை மட்டுமே நினைத்து இந்த பரிகாரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது மட்டுமே நடக்கும்.

சரி, நம்முடைய ஆசைகளை நிறைவேற்றிக் தரப்போகும் இலை, எந்த இலை என்று தெரிந்து கொள்வோமா. பூவரச இலை தான் அந்த இலை. பூவரசம்பூ என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். பெரும்பாலும் இது கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

poovarasu2

ஆனால், இந்த இலை கிடைப்பது ஒன்றும் அவ்வளவு அறிதான விஷயம் கிடையாது. நிறைய இடங்களில் இந்த மரம் இருக்கும். இதுதான் பூவரச இலை என்பது நமக்கு தெரிந்து இருக்காது. பூவரசம் மரம் எங்கு இருந்தாலும் அதிலிருந்து ஒரு இலையை மட்டும் பறித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை உங்களுடைய வீட்டிற்கு எடுத்து வந்து மஞ்சள் நீரால் கழுவி விடுங்கள். சுத்தமாக தண்ணீரை துடைத்து விடுங்கள்.

பூஜை அறையில் குலதெய்வத்தை நினைத்து ஒரு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். நீங்களும் பூஜை அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். இந்த பூவரச இலையை ஒரு தட்டில் வைத்து, ஒரு பேனாவை எடுத்து உங்களுடைய நிறைவேறாத ஆசையை ஒரே வரியில் இந்த இலையில் எழுதி விடுங்கள். எழுதும் போது குல தெய்வத்தை ஒருமுறை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.

poovarasu3

எடுத்துக்காட்டுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும், கடன் அடைய வேண்டும், கொடுத்த பணம் திரும்பி வர வேண்டும், எங்களுடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும், கணவர் என் பேச்சை கேட்க வேண்டும், மனைவி என் பேச்சை கேட்க வேண்டும், குழந்தைகள் நல்லபடியாக படிக்க வேண்டும். விரும்பியபடி திருமணம் நடக்க வேண்டும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும். இப்படி உங்களுடைய கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதை ஒரு வரியில் எழுதி இந்த இலையை அப்படியே சுருட்டி ஒரு மஞ்சள் நிற நூலில் கட்டி, ஏதாவது ஒரு சாமி படத்தின் பின்பக்கம் உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இதை அப்படியே வைத்து விடுங்கள். கருப்பு பேனாவில் மட்டும் எழுதாதீங்க.

இந்த இலையில் எழுதிய கோரிக்கை நிறைவேறுவதற்கு ஏற்றாற்போல், உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் நடக்க வேண்டும். அதற்கேற்ற முயற்சிகளை நீங்கள் எடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். கூடிய விரைவில் சீக்கிரமே நீங்கள் ஆசைப்பட்டு, அந்த இலையில் எழுதிய விஷயம் நடக்கும்.

kula-dheivam

அப்படிப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த மரம் தான் இந்த பூவரசமரம். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள். நஷ்டம் அடைவதற்கு எதுவுமே இல்லை. ஆனால் நினைத்தது நடந்து விட்டால்! நல்லதுக்காக நல்ல விஷயத்திற்கு மட்டும் இந்த குறிப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Author: admin