இன்றைய ராசி பலன் – 22-07-2021

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்த ஒரு பொருளையும் ஒப்படைப்பதில் எச்சரிக்கை தேவை. உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் அடங்கும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சவால்கள் ஆன வேலைகளை பொறுப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை மேலோங்கும். ஆரோக்கியம் சீராகி வரும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமைக்கு உரிய பலன்களை காண இருக்கிறீர்கள். விடாப்பிடியான வேண்டுதல்களுக்கு பலன் கிடைக்கக் கூடிய அற்புதமான நல்ல நாளாக அமைய இருக்கிறது. தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும் யோகமுண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தீட்டிய திட்டங்கள் எல்லாம் தேடியபடியே நிறைவேறக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உங்கள் மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் பாக்கியம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற மன உளைச்சல் நீங்கும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய நாணயத்திற்கு உரிய பலன்களையும் காண இருக்கிறீர்கள்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த சில விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்க பெறும். அரசு வழி காரியங்களில் அனுகூலமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். விட்டு சென்ற உறவுகள் மீண்டும் உங்களை வந்தடைய வாய்ப்புகள் உண்டு.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவாலான சில விஷயங்களை சிரமப்பட்டு முடிப்பீர்கள். எதிலும் காலதாமதம் ஏற்பட்டாலும் வெற்றி உங்கள் பக்கம் தான் எனவே கவலைப்படாமல் முயற்சி செய்யலாம். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் வந்து செல்லும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு. உத்யோகத்தில் நிம்மதி இருக்கும்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வர வேண்டிய பாக்கிகள் வசூலாக கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி காண்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் சிறப்பான வளர்ச்சியை எட்டலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் குடைச்சல் எரிச்சலை உண்டாக்கும் வகையில் அமையும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் புதிய விஷயங்களில் எல்லாம் உங்கள் பக்கம் வெற்றி திரும்பும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஜெயம் நிச்சயம். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்பட்டாலும் வெற்றி காணக் கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டு.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பிள்ளை இல்லாதவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளிவட்டாரத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரும் வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் நீங்கள் நினைப்பதை விட லாபம் அதிகரித்து காணப்படும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றை சாதக பலன்கள் உண்டு. வீண் விரயங்கள் ஏற்படாமலிருக்க ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பது நலம் தரும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்துக் கொள்வீர்கள். தாராள குணம் கொண்ட உங்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்க யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வது உத்தமம். ஆரோக்கியத்தை கூடுதலாக கவனிப்பது நல்லது.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் வந்து செல்ல வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எடுக்கும் அதிரடி முயற்சிகளுக்கு உங்களுடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்பு சரியாக கிடைக்கும். பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். தொலை தூர இடங்களிலிருந்து பயணம் செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. உத்யோகத்தில் உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

 

Author: admin