எம்எல்ஏக்களுக்கு எடியூரப்பா அளிக்கவிருந்த விருந்து ஒத்திவைப்பு

எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகள் ஆவதை ஒட்டி அவர் ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் வரும் 25ஆம் தேதி பாஜக எம்எல்ஏக்களுக்கு ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கிடையே தான் பதவி விலகப் போவதாக வெளியாகும் தகவல்கள் வதந்தியே என்றும் இதற்காக போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் எடியூரப்பா தன் ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இது போன்ற செயல்களால் கட்சித் தலைமைக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படுவதாகவும் எடியூரப்பா தன் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்

Author: admin