கொட்டும் மழையில் இருந்து தனது குஞ்சுகளை காப்பாற்ற போராடும் தாய் பறவை

கொட்டும் மழையில் இருந்து தனது குஞ்சுகளை பாதுகாக்கும் தாய் பறவை ஒன்றின் வீடியோ இணையத்தி வைரலாகிவருகிறது.

இந்த உலகில் பாசம் என்பது மனிதர்களுக்கும் மட்டுமானது இல்லை என்பதை நிரூபித்துள்ளது இந்த வீடியோ காட்சி. இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுதா ராமன் அவர்கள் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், கொட்டும் மழையில் இருந்து தாய் பறவை ஒன்று தனது குஞ்சுகளை பாதுகாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

30 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோ காட்சியில், தாய் பறவை ஒன்று கொட்டும் மழையில் இருந்து தனது குஞ்சுகளை காப்பாற்ற போராடுகிறது. இந்த வீடியோவை பார்க்கும்போது, பறவையாக இருந்தாலும் அதுவும் ஒரு தாய் என்பதை இந்த காட்சி நமக்கு உணர்த்துகிறது. அந்த காட்சியை நீங்களே பாருங்கள்.

Author: admin