“எடியூரப்பாவை நீக்கினால் கர்நாடகாவில் மீண்டும் ஜெயிக்க முடியாது” – சுப்பிரமணியன் சுவாமி

எடியூரப்பாவை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் கர்நாடகாவில் பாரதிய ஜனதாவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி முதன்முதலில் அமைய எடியூரப்பாதான் காரணம் என்றும் சுவாமி தெரிவித்தார். சிலர் தங்கள் சுய நலத்திற்காக எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்க முயற்சி செய்து வருவதாகவும் சுவாமி குற்றஞ்சாட்டினார். எடியூரப்பாவை ஏற்கனவே ஒரு முறை நீக்கி பாரதிய ஜனதா தோல்வியை தழுவிய நிலையில் மீண்டும் ஒரு முறை அத்தவறை செய்யக் கூடாது என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்

Author: admin