சிவகாசியில் நகர வீதிகளில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்

சென்னை,

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளை திறக்கலாம் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதனையடுத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகளில் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

அந்த வகையில் சிவகாசி கடை வீதிகளில் காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றாமல் பொதுமக்கள் வீதிகளில் சென்றதையும் காண முடிந்தது.

பின்னர் காவல்துறையினர் ஒலிபெருக்கிகள் மூலம், அங்கிருந்த மக்களை கலைந்து செல்லுமாறும், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தினர். மேலும் விதிகளை மீறி கடைகளை திறந்தவர்களிடம் கடைகளை மூட சொல்லி வற்புறுத்தினர்.

Facebook Comments Box
Author: sivapriya