முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

திருவனந்தபுரம்,

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் உருவாகியுள்ள ‘டவ்தே’ புயல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடியாகும். தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 128.8 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து இன்று காலை 1,388 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் தற்போது 4,439 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

Author: sivapriya