புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை,

சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அரபிக்கடலில் உருவாகியிருக்கும் தாக்தே புயல் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் வருவாய் பேரிடர் மேலாண்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Author: sivapriya