திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 1,251 பேர் பாதிப்பு 22 பேர் சாவு

திருவள்ளூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் இதன் தாக்கம் குறையவில்லை.

அதே போல திருவள்ளூர் மாவட்டத்திலும் கொரோனா தொற்றின் 2-வது அலையில் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

1,251 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 1,251 பேர் பாதிக்கப்பட்டனர். இது வரை மாவட்டம் முழுவதும் 76 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 67 ஆயிரத்து 37 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

7,999 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 964 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். 13.05.2021 ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 22 பேர் இறந்துள்ளனர்.

Author: sivapriya