விளையாட்டு துளிகள்

* இந்திய அணியின் பயிற்சியாளராக 2017ம் ஆண்டு ரவி சாஸ்திரி சமூக ஊடகமொன்றில் நேற்று , ‘ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் 2017ம் ஆண்டு முதல் இந்தியா முதல் இடத்தில் இருப்பதற்காக பெருமை கொள்கிறேன். அதற்கு வீரர்கள்தான் காரணம். இடையில் ஐசிசி விதிகள் மாற்றப்பட்ட போதும், நாம் அதே இடத்தில் தொடர்ந்தோம்’ என்று கூறியுள்ளார்.

* இந்திய ஹாக்கி வீரர் குஜ்ரந்த் சிங், ‘பயோ பபுள் காரணமாக வீரர்கள் ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் ஒன்றாக இருப்பதால் வீரர்களிடையே நெருக்கம், புரிதல் ஏற்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

* இலங்கை சுற்றுப்பயணத்துக்கு கேப்டன் தவானா, ஹர்திக்கா என்று விவாதம் எழுந்த நிலையில், ‘பந்து வீச முடியாவிட்டால் ஹர்த்திகிற்கு அணியில் வாய்ப்பு தருவது சரியாக இருக்காது’ என்று முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் சுட்டிக் காட்டியுள்ளார்.

Author: sivapriya