இத்தாலி ஓபன் அரையிறுதி பெட்ரா, ரிய்லி முதல்முறையாக தகுதி: ஸ்வெரவை பழிதீர்த்தார் நடால்

ரோம்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு அமெரிக்க வீரர் ரிய்லி ஒபெலகா, குராஷிய வீராங்கனை பெட்ரா மார்டிக் ஆகியோர் முதல் முறையாக தகுதிப் பெற்றுள்ளனர். ரோமில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதி ஒன்றில் குரோஷியா வீராங்கனை பெட்ரா மார்டிக்(25வது ரேங்க்), அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா(31வது ரேங்க்) ஆகியோர் மோதினர். முந்தைய சுற்றில் முன்னணி வீராங்கனையான அர்யனா சபலெங்காவை வீழ்த்திய ஜெசிகா முதல் செட்டில் கடும் சவால் தந்தார்.

Author: sivapriya