இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: லிவர்பூல் அசத்தல் வெற்றி

மான்செஸ்டர்

இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் நடப்பு சாம்பியன் லிவர்பூல் 4-2என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடட் அணியை அசத்தலாக வென்றது. இங்கிலீஷ் பிரிமீயர் லீக் நடப்பு கால்பந்து தொடரில் இன்னும் 2 சுற்று ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. ஆனாலும் அதிக புள்ளிகள் குவித்து, முதல் இடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டி 7வது முறையாக சாம்பியனாகி விட்டது. எனினும் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணிகள் ஐரோப்பிய சாம்பியன் லீக்கில் ஆடும் வாய்ப்பை பெறும். அதனால் எஞ்சிய ஆட்டங்களில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

இந்நிலையில் நேற்று மான்செஸ்டர் யுனைடட்-லிவர்பூல் அணிகள் மோதின. இந்த 2 அணிகளும் ஜன.24ம் தேதி ஏற்கனவே மோதிய முதல் சுற்று ஆட்டத்தில் யுனைடட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது. அதனால் பதிலடி தர லிவர்பூல் தீவிரமாக இருந்தது. ஆனாலும் யுனைடட் அணியின் கைதான் சற்று ஓங்கியிருந்தது. கூடவே கோல் அடிக்கும் முயற்சியில் யுனைடட் 18முறையும், லிவர்பூல் 17முறையும் ஈடுபட்டன. அவற்றில் யுனைடட் 3முறை மட்டுமே சரியாக கோலை நோக்கி பந்தை அடித்தது. அவற்றில் ப்ரூனோ, மார்கஸ் அடித்த பந்துகள் மட்டுமே கோலாகின.

ஆனால் லிவர்பூல் மிகச்சரியாக 8முறை கோலை நோக்கி அடித்தது. அவற்றில் 4 முயற்சிகளை யுனைடட் கோல்கீப்பர் தடுத்த விட்டார். எஞ்சிய 4 முயிற்சிகளில், ரோபெர்டோ 2முறையும், யுயோசோ, முகமது சாலா ஆகியோர் ஒருமுறையும் கோல் அடித்தனர்.
அதனால் ஆட்ட நேர முடிவில் லிவர்பூல் 4-2 என்ற கோல் கணக்கில் அசத்தலாக வென்று மான்செஸ்டருக்கு பதிலடி கொடுத்தது. இந்த வெற்றியின் மூலம் ஐரோப்பிய சாம்பியன் லீக்கில் விளையாடும் வாய்ப்பை லிவர்பூல் தக்க வைத்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி மான்செஸ்டர் சிட்டி முதல் இடத்தை பிடித்து விட்டதால் எஞ்சிய 3 இடங்களுக்கான போட்டியில் மான்செஸ்டர் யுனைடட், லெஸ்டர் சிட்டி, செல்சீயா, லிவர்பூல், வெஸ்ட் ஹாம் யுனைடட், டாட்டென்ஹாம், எவர்டன், ஆர்சனல் என 8 அணிகள் உள்ளன.

Author: sivapriya