கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவுக்கு பிளாஸ்மா வழங்கிய செக் குடியரசு

பெங்களூரு,

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் நாடு முழுவதும் உயிர் காக்கும் ஆக்சிஜன் உள்பட பல்வேறு மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகின் பல நாடுகள் இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில் செக் குடியரசு நாடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கர்நாடக மாநிலத்துக்கு 500 பிளாஸ்மா அலகுகளை வழங்கியுள்ளது.

Author: sivapriya