தடுப்பூசி உற்பத்தியைப் பெருக்க மோடிக்கு குலாம்நபி ஆசாத் கடிதம்

புதுடெல்லி,

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர், கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தக் கடிதத்தின் நகலை அவர் சுகாதார மந்திரி ஹர்சவர்தனுக்கு அனுப்பி உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி உற்பத்தியைப் பெருக்குவதற்கான சில பரிந்துரைகளும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்துக்கும், பிரதமர் மோடிக்கும் நெருக்கமான நல்லுறவு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Author: sivapriya