தமிழகத்தில் 2,635 மையங்களில் ஒரே நாளில் 62,353 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை,

தமிழகத்தில் 111-வது நாளாக நேற்று 2,635 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 62 ஆயிரத்து 353 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். அந்த வகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 34 ஆயிரத்து 245 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 17 ஆயிரத்து 21 முதியவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்கள் 3 ஆயிரத்து 46 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 8 ஆயிரத்து 41 பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 68 லட்சத்து 76 ஆயிரத்து 742 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.

Author: sivapriya