கர்நாடகாவில் டவ்-தே புயலுக்கு 4 பேர் உயிரிழப்பு; 73 கிராமங்கள் பாதிப்பு

பெங்களூரு,

டவ்-தே புயல் தீவிரமடைந்து வலுப்பெற்று வரும் நிலையில், கர்நாடகாவில் உள்ள 3 கடலோர மாவட்டங்கள் உள்பட 6 மாவட்டங்களில் உள்ள 73 கிராமங்களில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி கர்நாடக மாநில பேரிடர் மேலாண் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கர்நாடகாவில் டவ்-தே புயலால் கடந்த 24 மணிநேரத்தில் கனமழை முதல் தீவிர கனமழை பெய்துள்ளது.

கர்நாடகாவில் மழையுடன் மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. கடலோர பகுதிகளில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது என தெரிவித்து உள்ளது. புயலுக்கு 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

புயலால், மரங்கள் பல வேரோடு சாய்ந்துள்ளன. மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பர்மர்களும் சேதமடைந்து உள்ளன.

Author: sivapriya