சாம்சங் நிறுவனத்தின் அடுத்த அறிமுகங்கள்

சாம்சங் நிறுவனம், ஆகஸ்ட் மாதத்தில் தன்னுடைய அடுத்த தயாரிப்புகளை அறிமுகம் செய்ய இருப்பதாக செய்திகள் வருகின்றன.இந்த நிகழ்ச்சியின் போது, ‘சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எப் இ, கேலக்ஸி இசட் பிளிப் 3, கேலக்ஸி இசட் போல்டு 3′ ஆகிய மூன்று போன்களும் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது.வழக்கமாக ஒரு மாடலை அறிமுகம் செய்த பின் அதே வரிசையில் அடுத்த போனை அறிமுகம் செய்ய, கொஞ்சம் கூடுதல் கால அவகாசத்தை எடுக்கும், சாம்சங்.

ஆனால் இப்போது இந்த மூன்று போன்களில், இரண்டு போன்கள் இதற்கு முந்தைய மாடல்களின் அறிமுகத்துடன் ஒப்பிடும்போது வெகு விரைவாகவே வருகிறது. அதேசமயம், கேலக்ஸி நோட் வரிசை போன் அறிமுகம் ஆகாது என்றும் சொல்லப்படுகிறது.’கேலக்ஸி இசட் பிளிப் 3’ போன் விலை, 73 ஆயிரத்திலிருந்து, 88 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Author: sivapriya