காசாவில் உள்ள ஹமாஸ் மீது முழு பலத்துடன் தாக்குதல் தொடரும் – இஸ்ரேல் பிரதமர் பேச்சு

null

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.

இதற்கிடையில், கடந்த வாரம் முதல் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.

காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்தனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் கேராளாவை சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 192 பேர உயிரிழந்துள்ளனர். இந்த மோதலை உடனடியாக நிறுத்த இஸ்ரேலுக்கும் மற்றும் ஹமாஸ் அமைப்பிற்கும் உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்நிலையில், இஸ்ரேலிய பிரதமர் நேற்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில். காசாவில் உள்ள ஹமாஸ் மீது முழு பலத்துடன் இஸ்ரேல் பாதுகாப்புபடை தாக்குதலை தொடரும். இதற்கு நேரம் எடுக்கும். காசாவில் உள்ள ஹமாஸ் ஆட்சியாளர்களுக்கு இஸ்ரேல் மிகப்பெரிய விலை கொடுக்க விரும்புகிறது’ என்றார்.

Author: sivapriya