மதுரை: ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் சிகிச்சை மையங்கள் அமைக்க கோரிக்கை

மதுரையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் சிகிச்சை மையங்களை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்றாக மதுரை விளங்குகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மதுரையில் 1,095 பேருக்கு புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. 15 உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. இதன்மூலம் மதுரையில் இதுவரை கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 47,159 என்றும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 674 என்றும் உயர்ந்துள்ளது.

இங்குள்ள மருத்துவமனைகளுக்கு வரும் கொரோனா நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு ஆக்சிஜன் தேவை உள்ளது. இதனால் ஆக்சிஜன் வசதியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது

image.

மேலும் ஆக்சிஜன் படுக்கைக்காக அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் நீண்ட நேரம் நோயாளிகள் காத்திருக்கும் அவலம் உள்ளதாகவும் புகார்கள் உள்ளன. அரசு மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை படுக்கையில் இருந்து அகற்ற தாமதம் ஆவதாகவும் புகார்கள் உள்ளன.

இதன் காரணமாக காத்திருப்பில் உள்ள நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை தருவதிலும் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மதுரையில் அரசு மருத்துவமனைகளுக்கு அவசரத் தேவைகளுக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது

Author: admin