”நான் தினமும் கோமியம் குடிக்கிறேன்; கொரோனா வரவில்லை” – பாஜக எம்.பி. பிரக்யா சிங்

 “நான் தினமும் கோமியம் (பசுவின் சிறுநீர்) குடிக்கிறேன். அதனால்தான் நான் எந்த மருந்தையும் எடுத்துக்கொள்வதில்லை. தற்போது வரை எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை” என்று பாஜக போபால் தொகுதி எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் கூறியுள்ளார்.

போபாலில் நிகழ்ச்சி ஒன்றில்பங்கேற்று பேசிய அவர், “நானும் பசுவின் சிறுநீரை தினமும் குடிக்கிறேன். அதனால்தான் நான் எந்த மருந்தையும் எடுத்துக்கொள்வதில்லை. தற்போது வரை எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. அனைத்து மக்களும் நாட்டு மாடுகளை வைத்திருக்க வேண்டும். அனைவரும் அரசமரம், ஆலமரம், துளசி உள்ளிட்டவைகளை நட்டு வளர்க்க வேண்டும். அதை நட்டு நீங்கள் வளர்க்கும் போது உங்களுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவை இருக்காது. இந்த முறை போபாலில் ஒரு கோடி மரங்கள் நடப்படும். அதற்கு தேவையான தண்ணீர் வசதி தண்ணீர் டேங்குகள் மூலமாக வழங்கப்படும்” என்றார்.

முன்னதாக, குஜராத்தில் சிலர் குழுவாக இணைந்து மாடுகளின் சிறுநீர் மற்றும் சாணத்தை மேலே பூசிக்கொண்டு யோகா செய்தனர். அதன் பின்னர் அவர்கள் பசும் பாலில் குளித்தனர். இது ஒரு தவறான நடைமுறை எனக் கூறிய மருத்துவர்கள், இதன் மூலம் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்றும், விலங்குகளிடம் இருந்து மேலும் நோய்கள் மனிதருக்கு பரவும் என்றும் எச்சரித்தது நினைவுகூரத்தகக்து.

Author: admin