கொரோனாவால் உயிரிழந்த இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி உடலுக்கு உதயநிதி அஞ்சலி!

கொரோனா தொற்றால் உயிரிழந்த இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

இயக்குநர், நடிகர், பாடலாசியர் என பன்முகத்தன்மை கொண்டவர் அருண்ராஜா காமாராஜ், கபாலி படத்தில் இவர் எழுதிய ‘நெருப்புடா’ பாடல் பலரின் பாராட்டையும் பெற்றது. அதனைத்தொடர்ந்து, சிவகார்த்தியேயன் தயாரிப்பில் ‘கனா’ படத்தை இயக்கிய இவர் தற்போது, இந்தியில் ஹிட் அடித்த ’ஆர்டிகிள் 15’ படத்தை உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் இயக்கி வருகிறார்.  38 வயதாகும் இவரது மனைவி சிந்துஜா சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

image

சிந்துஜா சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது இறப்புக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், நடிகர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செத்தியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “நேர்த்தியான இயக்குனர் – நுட்பமான திரைக்கலைஞர் சகோதரரர் அருண்ராஜா காமராஜ்அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்” என்று நேரில் மரியாதை செய்ததோடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Author: admin