கொரோனா பேரிடர்: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி அளித்த நடிகர் விக்ரம்!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதவ, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 30 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார் நடிகர் விக்ரம்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையொட்டி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விக்ரம் முதல்வர் நிவாரண நிதிக்கு ஆன்லைன் மூலம் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்திருக்கிறார்.

முன்னதாக நடிகர் சூர்யா, அஜித், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, இயக்குநர் முருகதாஸ்,ஷங்கர், ரஜினி உள்ளிட்ட பலரும் நிதியுதவி அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Author: admin