திண்டுக்கல் மாவட்டம் பரப்பலாறு அணையிலிருந்து நாளை முதல் பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: திண்டுக்கல் மாவட்டம் பரப்பலாறு அணையிலிருந்து நாளை முதல் பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பரப்பலாறு அணையிலிருந்து 6 குளங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட கோரியுள்ள வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்திலுள்ள 6 குளங்களான, முத்து பூபால சமுத்திரம், பெருமாள்குளம், சடையகுளம், செங்குளம், இராமசமுத்திரம் மற்றும் ஜவ்வாதுபட்டி பெரியகுளம்ஆகியவற்றின் மொத்தம் 1222.85 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் பொருட்டு, 18.5.2021 முதல் 17 நாட்களுக்கு, பரப்பலாறு அணையிலிருந்து மொத்தம் 102.00 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

Author: admin