ஊரடங்கு: கள்ளக்குறிச்சி போலீஸிடம் சிக்காமல் இருக்க வயல் வழியாக பயணிக்கும் மக்கள்!

கள்ளக்குறிச்சியில் காவல்துறையினரின் தணிக்கையில் இருந்து தப்பும் விதமாக வாகன ஓட்டிகள் வயல்வெளிகள் வழியாக நகரப்பகுதிக்குள் சென்று வருகின்றனர். 

திருக்கோவிலூர் நகரப் பகுதிக்குள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவபர்களை தடுக்க சந்தப்பேட்டை, ஐந்து முனை ரோடு, செவலை ரோடு, திருவண்ணாமலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்களிடமும் காவல்துறையினர் அபராதம் வசூலிப்பதாக பரவிய தகவலை அடுத்து வாகன ஓட்டிகள் வயல்வெளிகள் வழியே சென்று வருகின்றனர்.  இவ்வாறு அதிக அளவிலான வாகன ஓட்டிகள் நகரப்பகுதியை அடைவதால் நெரிசல் அதிகம் ஏற்படுவதாக தெரிகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Facebook Comments Box
Author: sivapriya