இங்கிலாந்தில் மேலும் 1,979- பேருக்கு கொரோனா தொற்று

null

லண்டன்,

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,979- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 44 லட்சத்தை தாண்டியுள்ளது. இங்கிலாந்தில் தொற்று பாதிப்புடன் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த ஒருவாரத்தில் மட்டும் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து இருப்பது அந்நாட்டு அதிகாரிகளை கவலை அடையச்செய்துள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு , இங்கிலாந்தில் இதுவரை 2,323- பேருக்கு பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசியே சிறந்த தீர்வு என்பதால், மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை தீவிரமாக வலியுறுத்துவோம் என இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Facebook Comments Box
Author: sivapriya