டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்து தீவை வாங்க திட்டமா? அமெரிக்கா விளக்கம்

null
வாஷிங்டன்,

வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களுக்கிடையே 8 லட்சத்து 11 ஆயிரம் சதுர மைல்கள் அளவிலான பரப்பை உள்ளடக்கியது கிரீன்லாந்து. முற்றிலும் பனிப்பிரதேசமான இந்த தீவு டென்மார்க்கின் ஒரு தன்னாட்சி பிரதேசமாகும்.

கடந்த 2019- ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்காவின் அதிபரான டொனால்டு டிரம்ப், கிரீன்லாந்து தீவை வாங்க விருப்பம் தெரிவித்தார். ஆனால், டிரம்பின் இந்த விருப்பம் அபத்தமானது என டென்மார்க் பிரதமர் விமர்சிக்கவே, தனது டென்மார்க் சுற்றுப்பயணத்தையும் டொனால்டு டிரம்ப் ரத்து செய்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி பிளின்கன் விரைவில் டென்மார்க் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையடுத்து, பிளின்கனிடம் செய்தியாளர்கள் கிரீன்லாந்து தீவை வாங்க அமெரிக்கா இன்னமும் ஆர்வம் காட்டுகிறதா ? என கேள்வி எழுப்பினார். இக்கேள்விக்கு பதிலளித்த பிளின்கன், “இல்லை” என திட்டவட்டமாக கூறினார்.

Author: sivapriya