கேரளா அமைச்சரவை பதவியேற்பு விழாவில் 500 பேருக்கு மட்டுமே அழைப்பு – பினராயி விஜயன் தகவல்

null

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி அரசு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து கேரள சட்டமன்ற அமைச்சரவை பதவியேற்பு விழா, வரும் 20 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு தமது அரசின் பதவியேற்பு விழாவில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாகவும், அதே மைதானத்தில் 20ம் தேதி நடக்கவிருக்கும் அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box
Author: sivapriya