இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

null

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 52 லட்சத்து 28 ஆயிரத்து 996 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 33 லட்சத்து 53 ஆயிரத்து 765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 436 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 512 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 329 பேர் உயிரந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 78 ஆயிரத்து 719 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனாவின் பாதிப்பு மெல்ல குறைந்து வரும்போதும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் தாக்குதலால் பொதுமக்கள், பல்வேறு துறைகளில் பிரபலமான நபர்களும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரனான டாக்டர் கேகே அகர்வால் (62) கொரோனா பாதிப்பால் நேற்று இரவு உயிரிழந்தார். பத்மஸ்ரீ விருது பெற்ற கேகே அகர்வாலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபப்ட்டுவந்தது.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். டாக்டர் கேகே அகர்வாலின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Author: sivapriya