உலக பணக்காரர்கள் வரிசை : எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய பெர்னார்ட் அர்னால்ட்

null

நியூயார்க்

உலக பணக்காரர்களில் இரண்டாவது இடத்தில் இருந்த டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க்கை பெர்னார்ட் அர்னால்ட் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ப்ளூம்பெர்க்கின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திலிருந்த எலான் மஸ்க், தற்போது 160.6 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டுள்ளார்.இதற்கிடையில், 72 வயதான அர்னால்ட், சீனாவின் மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளில் தனது நிறுவனத்தின் ஆடம்பரப் பொருட்களின் விற்பனையின் காரணமாக அவரது நிகர மதிப்பு கிட்டத்தட்ட 47 பில்லியன் டாலர் அதிகரித்து 161.2 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

இது கடந்த ஜனவரி மாதத்தில் எலன் மஸ்கிடமிருந்த சொத்துக்களிலிருந்து 24 சதவீதம் குறைவாகும்.

மின்சார வாகன தயாரிப்புகளின் பங்குகள் 2.2 சதவீதம் சரிந்ததுடன், டெஸ்லா நிறுவனம் பிட்காயின் பேமண்ட் முறையை நிறுத்துவதாக எலான் மஸ்க் கடந்தவாரம் அறிவித்ததையடுத்து டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிய தொடங்கியது.

இதுவே எலான் மஸ்க் பணக்காரர்கள் பட்டியலில் பின் தங்கியதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.டெஸ்லாவின் பங்குகள் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 750 சதவீதம் உயர்ந்ததை அடுத்து 49 வயதான எலன் மஸ்க் ஜனவரி மாதத்தில் உலகின் பணக்காரர் ஆனார்.

Author: sivapriya