குழந்தைகளை அதிக அளவில் தாக்கும் இந்திய புதிய மரபணு மாற்ற வைரஸ் – சிங்கப்பூர் எச்சரிக்கை

null

புதுடெல்லி

சிங்கப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்படாத 17 கொரோனா வைரஸ் பாதிப்புகளில் 29 முதல் 57 வயது வரையிலான ஆறு நோயாளிகள், பி .1.617 எனப்படும் இந்தியாவில் கண்டறியப்பட்ட மரபணு மாற்ற வைரசால் பாதிக்கபட்டு உள்ளனர்.இவர்களில், இருவர் ஏற்கனவே முதல் தடுப்பூசி போட்டு உள்ளனர்.

விமான நிலையத்திலும் ஒரு பெரிய பொது மருத்துவமனையிலும் காணப்படும் கொத்து தொற்று பாதிப்புகளில் இந்தியாவில் கண்டறியப்பட்ட மரபணு மாற்ற வைரஸ் தொடர்புடைய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன இதனை அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் போன்ற மரபணு மாற்ற வைரசுகள் குழந்தைகளை அதிக அளவில் தாக்குவதால், பெரும்பாலான பள்ளிகளை மூட சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.

நாளை முதல் வரும் 28 ஆம் தேதி வரை அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நடத்தப்படும்.அத்துடன் சிறு வயதினருக்கு தடுப்பூசி போடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பி.1617 மரபணு மாற்ற வைரஸ் சிறார்களை அதிகமாக பாதித்துள்ளது என சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யே குங் (Ong Ye Kung) தெரிவித்தாலும், எத்தனை பேர் அதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

Author: sivapriya