“கி.ரா. மறைவால் இலக்கிய நதிகளில் கண்ணீர் ஓடுகிறது” – கவிஞர் வைரமுத்து

null

சென்னை,

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன், உடல்நலக்குறைவு காரணமாக புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 99. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எழுத்தாளர் கி.ரா. அவர்களின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு நூலகமாக மாற்ற புதுச்சேரி அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அரசு மரியாதையுடன் கி.ரா. அவர்களின் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கி.ரா. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கி.ரா. அவர்கள் வட்டார மொழி இலக்கியத்தின் ஆதி ஊற்று எனவும், அவரது மறைவால்
இலக்கிய நதிகளில் கண்ணீர் ஓடுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கி.ரா. மறைவுக்கு அரசு மரியாதை அறிவித்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் கி.ராஜநாராயணனுக்கு அரசு நினைவுமண்டபம் எழுப்பும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

Author: sivapriya