சேலம் அஸ்தம்பட்டியில் வாழைப்பழ தாரை தொங்கவிட்டு ஏழைகளுக்கு உதவி-சமூக ஆர்வலரின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு

null

சேலம்

சேலம் அஸ்தம்பட்டி பஸ் நிறுத்தம் தற்போது முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் தினமும் அதிகாலை நேரத்தில் வாழைப்பழ தார் ஒன்றை சமூக ஆர்வலர் ஒருவர் அந்த பஸ் நிறுத்தத்தில் தொங்க விட்டு சென்று விடுகிறார். இந்த வாழைப்பழங்களை அந்த வழியே செல்வோரும், ஏழைகளும், சாலை ஓரத்தில் சுற்றி திரிபவர்களும் பறித்து சாப்பிட்டு பசியை போக்கி கொள்கிறார்கள். கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகாலை நேரத்தில் வாழைப்பழம் தாரை கொண்டு வந்து கட்டிவிட்டு செல்லும் அந்த மனிதரின் சேவையை அஸ்தம்பட்டி பகுதி பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்

Facebook Comments Box
Author: sivapriya