கம்பம் பகுதியில் கொரோனா பாதுகாப்பு குறித்து ஆர்.டி.ஓ. ஆய்வு

null

கம்பம்

கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள உழவர்சந்தை, வர்த்தக நிறுவனங்கள், மளிகை கடைகள், ஓட்டல்களில் முககவசம், சானிடைசர், சமூகஇடைவெளி உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா? என உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. சக்திவேல் ஆய்வு செய்தார். அப்போது அவர் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மளிகை கடை உரிமையாளர்களை எச்சரிக்கை செய்தார்.

பின்னர் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த கம்பம், காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கூடலூர் பகுதியை சேர்ந்த மனுதாரரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று விசாரணை செய்து தகுதியானவர்களுக்கு உடனே முதியோர் உதவித்தொகை வழங்க பரிந்துரை செய்தார். இதில் உத்தமபாளையம் தாசில்தார் உதய ராணி, வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

Author: sivapriya