இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.63 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

null

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் தொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ளது.

அந்த தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 52 லட்சத்து 28 ஆயிரத்து 996 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 33 லட்சத்து 53 ஆயிரத்து 765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 436 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 512 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 329 பேர் உயிரந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 78 ஆயிரத்து 719 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை மக்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி மொத்த எண்ணிக்கை 18 கோடியே 44 லட்சத்து 53 ஆயிரத்து 149 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18 லட்சத்து 69 ஆயிரத்து 223 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Author: sivapriya