இன்று புயல் சேதத்தை நேரில் ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி..!

புயல் சேதத்தை ஆய்வு செய்ய பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார்.
டவ் தே புயல் குஜராத் மற்றும் யூனியன் பிரதேசமான டியூவில் கடலோரப் பகுதிகளை பெரும் சேதத்திற்கு ஆளாக்கியுள்ளது. அகமதாபாத், வடோதரா , சூரத் உள்ளிட்ட நகரங்கள் புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கியுள்ளன.
இந்தியாவின் மேற்கு கரையோர அனைத்து மாநிலங்களையும் புயல் கடும் சேதத்திற்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை 9.30 மணிக்கு குஜராத் செல்கிறார்.
பாவ்நகரில் இருந்து வான் மூலம் அவர் புயல் சேதங்களைப் பார்வையிட உள்ளார். அதன் பின்னர் அகமதாபாத்தில் உயர் அதிகாரிகளுடன் நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.
டவ் தே புயலுக்கு 13 பேர் உயிரிழந்ததாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. சுமார் 6 ஆயிரம் கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதுடன், 70 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன. 674 சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதால் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
Author: admin