ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி ஒரே மாதத்தில் 10 மடங்கு அதிகரிப்பு – மத்திய மந்திரி தகவல்

null

புதுடெல்லி,

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை மந்திரி மன்சுக் மண்டாவியா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா சிகிச்சைக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் அனைத்தும் தற்போது இந்தியாவிலேயே கிடைக்கின்றன. அவற்றின் உற்பத்தியை அதிகரித்ததன் மூலமும், இறக்குமதியை அதிகரித்ததன் மூலமும் அதிகமாக கிடைக்கிறது. அவற்றின் சப்ளையை மும்முனை வியூகம் மூலம் மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இந்தியாவில் ரெம்டெசிவிர் மருந்துகள் உற்பத்தி செய்யும் ஆலைகளின் எண்ணிக்கை 20-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஏப்ரல் மாதத்தில் 10 லட்சம் குப்பிகள் ரெம்டெசிவிர் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இம்மாதம் 1 கோடி குப்பிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரே மாதத்தில் உற்பத்தி 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பேவிபிரவீர் உள்ளிட்ட மருந்துகளின் உற்பத்தியும் உயர்த்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Author: sivapriya