மேலாளர் உள்பட 4 பேருக்கு கொரோனா:அரூர் மத்திய கூட்டுறவு வங்கி கிளை மூடல்

null

அரூர்

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் வருகிற 24-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள் செயல்படும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அரூர் கிளையில் பணிபுரியும் மேலாளர், ஊழியர்கள் உள்பட 4 பேருக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு பரிசோதனை நடத்தியதில் அவர்கள் 4 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று வங்கி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முதல் தற்காலிகமாக 2 நாட்களுக்கு மட்டும் வங்கி மூடப்பட்டது. மேலும் வங்கியில் பணிபுரியும் பிற ஊழியர்களுக்கு அரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Author: sivapriya