கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கொரோனாவுக்கு 4 பேர் பலி 712 பேர் பாதிப்பு

null

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 4 பேர் பலியான நிலையில் 712 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4 பேர் பலி

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 64 வயது முதியவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 16-ந் தேதி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 18-ந் தேதி அவர் இறந்தார். கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 44 வயது ஆண், கொரோனா பாதிப்புடன் கடந்த 11-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் கடந்த 19-ந் தேதி இறந்தார். கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 14-ந் தேதி சென்னை ெரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 16-ந் தேதி அவர் இறந்தார். கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 58 வயது ஆண், கொரோனா பாதிப்புடன் கடந்த 14-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் கடந்த 17-ந் தேதி இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தவர்களின் எண்ணிக்கை 165 ஆக உள்ளது.

தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
712 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 712 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 329 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரையில் 24 ஆயிரத்து 986 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 18 ஆயிரத்து 83 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 738 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 165 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Author: sivapriya