பீர் பாட்டிலை வைத்து மாடல் அழகியை தாக்கிய நடிகை சஞ்சனா கல்ராணி

null

பெங்களூரு

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சஞ்சனா கல்ராணி. இவர் நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். சஞ்சனா கல்ராணி சமீபத்தில் போதை மருந்து வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டார். பின்னர் பல மாதங்கள் கழித்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வந்தனா மாடல் ஜெயின் என்பவரை தாக்கியதாக தற்போது இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சஞ்சனா கல்ராணி, மாடல் அழகி வந்தனா ஜெயின் மீது பீர் பாட்டிலை வீசி உடல்ரீதியாக தாக்கி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

சஞ்சனா தாக்கியதில் வந்தனா ஜெயினுக்கு பார்வை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, வந்தனா சார்பில் கப்பன் பார்க் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக வந்தனா ஜெயின் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

வந்தனாவின் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், சஞ்சனா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கப்பன் பார்க் போலீசாருக்கு உத்தரவிட்டது, இதை தொர்ந்து கப்பன் பார்க் போலீசார், நடிகை சஞ்சனா மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author: sivapriya