கொரோனா தொற்று: உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தது: 2.76 லட்சம் பேர் பாதிப்பு

null

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை, மோசமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தினந்தோறும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அந்த கொலைகார வைரஸ் பலி கொண்டு வருகிறது. உயிரிழப்பு அதிகரிப்பது மக்களை சொல்லவொணா துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.

அந்த வகையில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் 3,874 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து இருக்கிறார்கள்.

இதுவரை நாட்டில் கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 87 ஆயிரத்து 122 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 110 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இதுவரை நாட்டில் 2 கோடியே 57 லட்சத்து 72 ஆயிரத்து 400 பேரை கொரோனா வைரஸ் தன் ஆக்டோபஸ் கரங்களுக்குள் கொண்டு வந்து இருக்கிறது.

இன்று ஒரே நாளில் நாடு முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து 3 லட்சத்து 69 ஆயிரத்து 077 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள்.

இதுவரையில் குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 23 லட்சத்து 55 ஆயிரத்து 440 ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 31 லட்சத்து 29 ஆயிரத்து 878 ஆக இருந்தது.

இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 18,70,09,792 ஆக உள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி, இந்தியாவில் இதுவரை 32,23,56,187 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 20,55,010 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Author: sivapriya