ராஜீவ் காந்தி நினைவு தினம்: சிலைக்கு பால் அபிஷேகம் செய்து அஞ்சலி

null
லூதியானா,

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டு கொல்லப்பட்ட பின்னர் பிரதமரானவர் ராஜீவ் காந்தி. 40 வயதில் பிரதமர் பொறுப்பு ஏற்று கொண்டு நாட்டின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை பெற்றவர்.

கடந்த 1991ம் ஆண்டு மே 21ந்தேதி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பேரணியில் கலந்து கொள்ள வந்த அவர் விடுதலை புலிகளின் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலியானார். இந்நிலையில், அவரது 30வது நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு பஞ்சாப்பின் லூதியானா நகரில் அவரது சிலைக்கு ஸ்ரீ இந்து தக்த் அமைப்பினர் பால் அபிஷேகம் செய்து அஞ்சலி செலுத்தினர். இதில் அந்த அமைப்பின் பஞ்சாப் தலைவர் வருண் மேத்தா, சிவம் வர்மா மற்றும் ரோகித் சர்மா பூட்டோ உள்ளிட்ட செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மேத்தா, ராஜீவ் காந்தி 40 வயதில் நாட்டின் பிரதமரானார். இந்திய அரசியலில் இளைஞர்களின் பங்கை உறுதி செய்ய 18 வயதில் இளைஞர்களுக்கு ஓட்டு போடும் அதிகாரம் கிடைக்க செய்தவர். நாட்டில் கணினி புரட்சியும் அவராலேயே ஏற்பட்டது. பயங்கரவாதத்தினை உலக அரங்கில் எப்பொழுதும் எதிர்த்தவர் அவர்.

அதனால், இலங்கையில் மீண்டும் அமைதியை கொண்டு வர, தன்னுயிரை ஈந்தவர். அவராலேயே, நாட்டின் ஜனநாயக நடைமுறையில் இளைஞர்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதனாலேயே, எங்களுடைய அமைப்பு, நாட்டின் இளம் வயது பிரதமராகி உயிரிழந்த ராஜீவ் காந்திக்கு பால் அபிஷேகம் செய்து, மலர்களால் அஞ்சலி செலுத்தியுள்ளது.

வீரத்தியாகம் செய்தவர்களின் தியாகத்திற்கு கவுரவம் அளிக்க வேண்டியது எங்களுடைய கடமை. வீரத்தியாகம் செய்தவர்களின் தியாகம் பற்றி வருங்கால தலைமுறையினர் அறிந்திருக்க செய்வதும் எங்களது கடமை என அவர் கூறியுள்ளார்.

Author: sivapriya