‘இந்திய வகை கொரோனா’ என்று பதிவிடப்படும் கருத்துக்களை நீக்குக – சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிதம்

null

புதுடெல்லி,

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரசுக்கு பி.1.617 என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வகை கொரோனா வைரஸ் உலக அளவில் கவலையளிக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட பி.1.617 வகை கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பரவலை ‘இந்திய வகை கொரோனா’ என்று பலரும் தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்களில் ‘இந்திய வகை கொரோனா’ என்ற பெயரில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

இந்நிலையில், ‘இந்திய வகை கொரோனா’ என்று இடம்பெற்றுள்ள சமூகவலைதள பதிவுகளை உடனடியாக நீக்கும்படி சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில். உலக சுகாதார அமைப்பால் மேற்கோள் காட்டப்பட்ட அறிவியல் ரீதியிலான கருத்துக்களின் மூலம் ‘இந்திய வகை கொரோனா’ என்று எதும் இல்லை. ‘இந்திய வகை கொரோனா’ என்பது முழுமையும் தவறானது.

பி.1.517 வகை கொரோனாவை ’இந்திய வகை கொரோனா’ என்று உலக சுகாதார அமைப்பு தனது எந்த அறிக்கையிலும் தெரிவிக்கவில்லை. ஆகையால், சமூகவலைதளங்களில் ‘இந்திய வகை கொரோனா’ என பதிவிடப்படும் கருத்துக்களை உடனடியாக நீக்கவேண்டும்’ என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Author: sivapriya