கொரோனாவால் உயிரிழந்த பள்ளி ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய டெல்லி முதல்-மந்திரி

null

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் நிதின் தன்வர். இவர் கடந்த ஆண்டு கொரோனா தடுப்பு பணியில் டெல்லி அரசு சார்பில் ஈடுபடுத்தப்பட்டார்.

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வது தொடர்பான பணியில் இவர் ஈடுபடுத்தப்பட்டார். மேலும், பல்வேறு கொரோனா தடுப்பு பணிகளிலும் இவர் ஈடுபட்டார்.

இதற்கிடையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிதின் தன்வருக்கு கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிதின் தன்வர் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த அரசு பள்ளி ஆசிரியர் நிதின் தன்வரின் குடும்பத்திற்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். நிதின் தன்வரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த கெஜ்ரிவால் ஆறுதல் கூறினார்.

Facebook Comments Box
Author: sivapriya