ஏர் இந்தியா இணையதளத்தில் மிகப்பெரிய சைபர் தாக்குதல்: 45 லட்சம் பேரின் தரவுகள் கசிந்தன

null

புதுடெல்லி,

அரசு பொத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியாவின் இணைய தளத்தில் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. பயணிகளின் தரவுகளை சேமித்து வைக்கும் சர்வகள் மீது நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதலில் பயண விவரங்கள், கிரெடிட் கார்டு தகவல்கள், பாஸ்போர்ட் தகவல் போன்றவை கசிந்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா கூறுகையில், 2011 முதல் பிப்ரவரி 2021 வரை பதிவு செய்யப்பட்டிருந்த தகவல்கள் கசிந்துள்ளன. அதில் பெயர், பிறந்த தேதி, தொடர்புத் தகவல், பாஸ்போர்ட் தகவல், டிக்கெட் தகவல், ஸ்டார் அலையன்ஸ் மற்றும் ஏர் இந்தியாவில் அடிக்கடி பயணிக்கும் பயணியர் தகவல்கள், அத்துடன் கிரெடிட் கார்டுகளின் விவரங்களும் கசிந்துள்ளன. கடந்த பிப்ரவரி மதம் இந்த தகவல் எங்களுக்க்கு கிடைத்தது.

கிரெடிட் கார்டு சி.வி.வி., விவரங்கள் டேட்டா பிராசசர் நிறுவனத்திடம் இல்லாததால் அந்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த உளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya