அரசு பங்களாவில் இபிஎஸ் தொடர்ந்து தங்க அனுமதி; பங்களாவை காலி செய்ய ஓபிஎஸ் அவகாசம் கேட்பு!

தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

சென்னை கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பங்களாவில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கையை ஏற்று 2011 முதல் தங்கியிருக்கும் பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பங்களாவை காலி செய்ய தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், தனது தம்பி மறைவால் முழுமையாக காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது பங்களாக்களை காலி செய்த நிலையில் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. புனரமைப்புப் பணிகள் முடிந்த பிறகு புதிய அமைச்சர்களுக்கு பங்களாக்களை பொதுப்பணித்துறை ஒப்படைக்க உள்ளது.     

Facebook Comments Box
Author: sivapriya