கொரோனா: புதிய தொழில்நுட்பங்களுக்கு நிதியுதவி – ஸ்டார்ட் அப்களுக்கு மத்திய அரசு அழைப்பு

இந்தியாவில் தற்போதைய சூழலில் கொரோனா மிகவும் வேகமாக பரவிவருகிறது. இந்த கோவிட் 19 இரண்டாவது அலையை சமாளிக்க, அரசு சார்பில் பலதரப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான தயாரிப்புகளை உருவாக்குவதற்கான விண்ணப்பங்களை அனுப்பக்கூறி மத்திய அரசு அறிவித்துள்ளது.

image

இதுதொடர்பாக பத்திரிகை தகவல் பணியகத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், 

நிதிஃபார்கொவிட்2.0 (NIDHI4COVID2.0) என்ற  இந்த புதிய முயற்சியின் கீழ் விண்ணப்பிக்கக்கூடிய நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். தகுதியான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தி, சிறிய தீர்வு, கொவிட் தொடர்புடைய மருத்துவ பாகங்கள், நோயறிதல் போன்றவற்றுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.

நாட்டில் தற்போது நிலவும் கோவிட் நெருக்கடியை எதிர்கொள்ள உள்நாட்டுத் தீர்வுகளையும், புதுமையான தயாரிப்புகளையும் ஆதரிப்பதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியம் (என்எஸ்டிஇடிபி), இந்த சிறப்பு முயற்சியை எடுத்துள்ளது. இது கோவிட்-19 நெருக்கடிக்கு எதிராக போராட உதவும்” என கூறப்பட்டுள்ளது.

Author: sivapriya