கிரிகெட் வீரர் புவனேஷ்வர் குமார் தந்தை புற்றுநோயால் உயிரிழப்பு

இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் தந்தை உயிரிழந்தார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் தந்தை கிரண் பால் சிங் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உத்தரபிரதேசத்தின் மீரட் பகுதியில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார். உத்தரபிரதேசத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றிய கிரண் பால் சிங்கிற்கு வயது 63.

image

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கிரண் பால் சிங்கிற்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்த நிலையில் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அதன் பின்னர் தனது சொந்த ஊரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் அவரது உடல்நிலை மோசமானதால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்.

Author: sivapriya