“பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் பவுலராக நான் உருவாக தோனி தான் காரணம்!” – தீபக் சாஹர்

டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் பவுலராக நான் உருவாக காரணமே தோனி தான் காரணம் என தெரிவித்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தீபக் சாஹர்.

அண்மையில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் அவர். தோனியின் தலைமையின் கீழ் விளையாடி நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

“தோனியின் தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்பது எனது பெருங்கனவு. அவரது தலைமையின் கீழ் விளையாடி நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். எனது ஆட்டம் அடுத்த படிக்கு முன்னேற அவரது வழிகாட்டுதல் பெரிதும் உதவின. என்னை எப்போதுமே சப்போர்ட் செய்வார். பொறுப்புகளை எப்படி சுமப்பது என்பதை சொல்லிக் கொடுத்தவர். 

எங்கள் சென்னை அணியில் என்னைத் தவிர யாருமே பவர் ப்ளேயில் மூன்று ஓவர்கள் வீசியதில்லை. அதற்கு காரணம் தோனி தான். ஆட்டத்தின் முதல் ஓவரை வீசுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. ரன்கள் விட்டுக் கொடுப்பதை எப்படி கட்டுப்படுத்துவது என்பதில் நான் தேர்ச்சி பெற்று வருகிறேன். குறிப்பாக டி20 போட்டிகளில் அதை என்னால் கச்சிதமாக செய்ய முடிகிறது என நம்புகிறேன்” என தீபக் சாஹர் தெரிவித்துள்ளார். 

image

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் சாஹர் நிச்சயம் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author: sivapriya